கர்நாடகாவில் ஆட்சி அமைத்துள்ள பாஜகவிற்கு மஜத வெளியில் இருந்து ஆதரவு கொடுக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
மஜத - காங்கிரஸ் கூட்டனி ஆட்சி கர்நாடக சட்டப்பேரவையில் போதுமான பெரும்பான்மையை நிரூபிக்க தவறியதால் ஆட்சி கவிழ்ந்தது. இதனையடுத்து ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரி எடியூரப்பா கர்நாடக முதல்வராக பதவியேற்றுக்கொண்டார்.
இருப்பினும் எடியூரப்பா வரும் ஜூலை 31 ஆம் தேதிக்குள் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளார். இதனை ஏற்று வரும் திங்கட்கிழமை எடியூரப்பா சட்டபேரவையில் பெரும்பான்மையை நிரூப்பிக்க உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மஜத-வின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என ஆலோசனை கூட்டம் ஒன்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில் குமாரசாமி, எடியூரப்பாவிற்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்பது குறித்து பேசினாராம். இதர்கு சில எம்.எல்.ஏ-க்களும் சம்மதம் தெரிவித்துள்ளனராம்.
விரைவில் இது குறித்த முடிவை குமாரசாமி வெளியிடுவார் என கட்சியின் நெருங்கிய வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.