Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பா.ரஞ்சித் இந்துவே இல்லை... என்கிட்ட ஆதாரம் இருக்கு: ஆஹா.. சொல்லிட்டாரு எச்.ராஜா!!

Advertiesment
பா.ரஞ்சித் இந்துவே இல்லை... என்கிட்ட ஆதாரம் இருக்கு: ஆஹா.. சொல்லிட்டாரு எச்.ராஜா!!
, வெள்ளி, 26 ஜூலை 2019 (14:09 IST)
பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா இயக்குனர் பா.ரஞ்சித் இந்துவே இல்லை என பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். 
 
இன்று அத்திவரதரை குடும்பத்துடன் தரிசித்த எச்.ராஜா அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பா.ரஞ்சித் குறித்து ஆவேசமான கருத்துக்களை முன்வைத்தார். எச்.ராஜா கூறியதாவது, 
 
ராஜராஜ சோழன் உயிரோடு இருந்தால் பா.ரஞ்ன்சித் எந்த ஒரு கருத்தையும் கூறி இருக்க மாட்டார். சரித்திர ஆதாரங்களோடு ராஜராஜ சோழன் ஆட்சியில் தனி உடமை, நில உடமை கிடையாது. அவர் ஆட்சி காலத்தில் தீண்டாச்சேரி என்கிற ஒன்று இருந்தது. 
webdunia
தீண்டாமை என்பது சமண மதம் வந்த பிறகுதான் உருவானது. சமண மதத்தில் தண்டனைகள் கிடையாது. ஆனால், தவறு செய்தவர்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்திருந்தார்கள். இந்து சமுதாயத்தில் தீண்டாமை என்னும் ஒன்று கிடையாது. 
 
இது கிறிஸ்தவ மதமாற்ற சக்திகளுடைய சதி. இயக்குனர் ரஞ்சித் இந்து கிடையாது. நான் இதை ஆதாரங்களோடு சில விஷயங்களை சமர்பித்தால் சிலருக்கு என் மீது கோபம் வரும். பா.ரஞ்சித், வைரமுத்து போன்றவர்கள் நோக்கமே இந்து சமுதாயத்தில் சண்டையை மூட்டுவதுதான். 
webdunia
சண்டையை மூட்டி ஜாதி கலவரத்தை தூண்டி அதன் மூலம் மதமாற்றம் செய்பவர்கள். ரஞ்சித்தின் செயலானது மாதமாற்றத்தின் ஒரு பகுதி என பேசியுள்ளார். 
 
இதற்கு முன்னர் இயக்குனர் பா.ரஞ்சித் மாமன்னர் ராஜராஜ சோழன் உயிரோடு இருந்திருந்தால் எனது விமர்சனத்தை ஏற்று என்னுடன் உரையாட வந்திருப்பார் என பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

”ஜெய்ஸ்ரீ ராம்” பக்தர்களுக்கு ஆதரவாக பிரதமருக்கு கடிதம் எழுதிய நடிகை