Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்கார் போட்ட ரோடு.. இஷ்டத்துக்கு ஓடு!- ஆட்டம் போட்ட இளைஞருக்கு ஆப்பு வைத்த அரசு!

Webdunia
வியாழன், 1 அக்டோபர் 2020 (14:00 IST)
கேரளாவில் அரசு பேருந்துக்கு வழிவிடாமல் சாலையில் அட்டகாசம் செய்த இளைஞருக்கு கேரள அரசு அபராதம் விதித்துள்ளது.

கேரளாவின் கண்ணூர் பகுதியில் பய்யனூரை சேர்ந்தவர் பிரவீன். பெரும்பா என்ற பகுதியில் இவர் சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் ஒரு அரசு பேருந்து வந்துள்ளது. அரசு பேருந்து ஓட்டுனர் வழிவிட கோரி ஹாரன் அடித்துள்ளார். ஆனால் அதை பொருட்படுத்தாத பிரவீன் தொடர்ந்து நடு ரோட்டிலேயே பேருந்துக்கு வழிவிடாமல் சென்றுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் இரு கைகளையும் எடுத்துவிட்டு வண்டி ஓட்டுவது, கால்களை நீட்டுவது என்று சேட்டைகள் செய்தபடியே சென்றுள்ளார். இதை பேருந்தில் இருந்த பலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இதை தொடர்ந்து நடவடிக்கை எடுத்த கேரள அரசு போக்குவரத்து துறை அந்த இளைஞருக்கு ரூ.10,500 அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமித்ஷாவை சந்தித்தே ஆக வேண்டும்: ஆட்டோவில் வந்த அகோரியால் பரபரப்பு..!

பேச்சுவார்த்தை இல்லை.. அமெரிக்க பொருட்களுக்கு 125% வரி.. சீனா அதிரடி..!

கே.என்.நேரு சகோதரர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.. திடீர் நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதி..!

பாஜக தலைவர் இவர் தானா? எதிர்த்து யாரும் போட்டி இல்லை.. அண்ணாமலை என்ன ஆவார்?

எடப்பாடி சிங்கக்குட்டி.. ஜெயலலிதா 8 அடி பாய்ந்தால், அவர் 16 அடி பாய்வார்: செல்லூர் ராஜூ

அடுத்த கட்டுரையில்
Show comments