Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விண்ணில் 2 செயற்கைக் கோள்களை இணைக்கும் முயற்சியில் வெற்றி: இஸ்ரோ சாதனை..!

Mahendran
வியாழன், 16 ஜனவரி 2025 (10:57 IST)
விண்ணில் இரண்டு செயற்கைக்கோள்களை டாக்கிங் முறையில் இணைக்கும் முயற்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் வெற்றி பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

விண்ணில் இரண்டு செயற்கைக்கோள்களை இணைக்கும் தொழில்நுட்பத்தை ஏற்கனவே மூன்று நாடுகள் பெற்றிருந்த நிலையில், தற்போது இந்தியா நான்காவது நாடு என்ற பெருமையை பெற்றுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி ஸ்பேடெக்ஸ் ஏ, ஸ்பேடெக்ஸ் பி ஆகிய இரண்டு விண்கலங்கள் இஸ்ரோ சார்பில் பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் மூலம் விண்ணில் நிலை நிறுத்தப்பட்டன. ஜனவரி 7 ஆம் தேதி முதல் டாக்கிங் செயல்முறை நடைபெறும் என்று ஏற்கனவே இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவித்திருந்த நிலையில், சில தொழில்நுட்ப பிரச்சினைகள் காரணமாக ஜனவரி 9 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது.

கடைசி நிமிடத்தில் டாக்கிங் சோதனை முயற்சி கைவிடப்பட்டிருந்த போதிலும், தற்போது இரண்டு விண்கணங்களை இணைக்கும் முயற்சி வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

"விண்ணில் இரண்டு செயற்கைக்கோள்களை டாக்கிங் முறையில் இணைக்கும் முயற்சியில் வெற்றி கண்டுள்ளோம். மேலும், இந்த தொழில்நுட்பத்தை அறிந்த நான்காவது நாடு என்ற பெருமையை பெற்றுள்ளோம்," என்று இஸ்ரோவின் சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவுக்கு ஆட்டோ சின்னம் இல்லை.. ‘விசில்’ சின்னத்திற்கு குறி வைப்பா?

திருச்செந்தூர் ஆவணி திருவிழா: பக்தி வெள்ளத்தில் பக்தர்கள்.. தேரோட்டம் உற்சாகம்!

எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் போதைப்பொருள் கடத்தல்.. 1 கோடி ரூபாய் பணத்துடன் 6 பேர் கைது..!

20 ரூபாய் வாட்டர் பாட்டில் 100 ரூபாய்க்கு விற்பது ஏன்? உணவக சங்கங்களுக்கு நீதிமன்றம் கேள்வி

காங்கிரஸ் தலைவர் கார் மீது மோதிய சுரேஷ் கோபி மகன் கார்.. கேரளாவில் பெரும் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments