Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவில் குறைந்த கொரோனா; நவம்பரில் பள்ளிகள் திறப்பு!

Webdunia
ஞாயிறு, 19 செப்டம்பர் 2021 (15:26 IST)
கேரளாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தீவிரமாக இருந்து வந்த நிலையில் தற்போது குறைந்துள்ளதால் பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் பல மாதங்களாகவே கொரோனா பாதிப்பு இருந்து வரும் நிலையில் சமீப காலமாக பாதிப்புகள் குறைந்து வந்தன. இந்நிலையில் சமீபத்தில் கேரளாவில் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரிக்க தொடங்கியது தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அங்கு வார விடுமுறைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் தற்போது கேரளாவில் கொரோனா பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. கேரளாவில் நீண்ட காலமாக பள்ளிகள் செயல்படாமல் இருந்து வரும் நிலையில் பிற மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன, இதனால் நவம்பர் 1ம் தேதி முதல் கேரளாவில் 10,12 வகுப்புகளுக்கும், 15ம் தேதி முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளி திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆவடி - சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு புதிய மின்சார ரயில்.. தேதி அறிவிப்பு..!

வேகமாக பரவி வரும் மெட்ராஸ் ஐ.. விழிப்புணர்வு தேவை என கூறும் மருத்துவர்கள்..!

US Presidential Election: வெற்றியை தீர்மானிக்க போகும் 7 மாகாணங்கள்! ட்ரம்ப் செய்த ட்ரிக் வேலை செய்யுமா?

திமுக குடும்ப ஆட்சியை எம்ஜிஆர் அகற்றியதை போல.. விஜய்யும் அகற்றுவார்! - தவெக செய்தி தொடர்பாளர்!

தமிழகத்தில் நவம்பர் 10ஆம் தேதி வரை மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments