Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முல்லை பெரியாறு அணை விவகாரம்.. யூடியூபர்களுக்கு கேரள அமைச்சர் எச்சரிக்கை..!

Mahendran
வியாழன், 15 ஆகஸ்ட் 2024 (18:12 IST)
முல்லைப் பெரியாறு அணை குறித்து தவறான தகவல்களை ஊடகங்கள் மற்றும் யூடியூபர்கள் வெளியிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள மாநில நீர்ப்பாசனத்துறை அமைச்சர் எச்சரித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் முல்லை பெரியாறு அணை குறித்தும் அந்த அணையால் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்தும் ஊடகங்கள் மற்றும் யூட்யூபில் தவறான தகவல்கள் பகிரப்பட்டு வருவதாகவும் இவ்வாறு தகவல்களை பகிர்பவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீர் பாசன துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின் தெரிவித்துள்ளார்.

முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது என்றும் மாவட்ட நிர்வாகத்திடம் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மாநில அரசு பொறுப்பை ஒப்படைத்து உள்ளது என்றும் எனவே முல்லைப் பெரியாறு அணை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றும் இது குறித்து யாரும் தவறான தகவல்களை, பொதுமக்கள் அச்சப்படும் வகையிலான தகவல்களை பரப்ப வேண்டாம் என்றும் அமைச்சர் கேட்டு கொண்டு உள்ளார்

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிரா சட்டமன்ற எம்.எல்.ஏக்கள் அடிதடி சண்டை.. சட்டமன்றத்திற்கு குண்டர்கள் வந்தார்களா?

கோபாலபுரம் இல்லத்தில் மு.க.முத்து உடல்; துணை முதல்வர் உதயநிதி அஞ்சலி..!

வங்கதேசத்தவர்கள் என கூறி முகாமில் அடைக்கப்பட்ட 19 பேர். சொந்த நாட்டிலேயே அகதிகளா?

15 வயது சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்த 3 மர்ம நபர்கள்.. காதல் விவகாரமா?

ஈபிஎஸ் அவராக பேசவில்லை, அவரை யாரோ பேச வைக்கிறார்கள்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments