Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வயநாடு நிலச்சரிவு - இறந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.6 லட்சம் நிதியுதவி..! கேரளா அறிவிப்பு..!!

Landslide

Senthil Velan

, புதன், 14 ஆகஸ்ட் 2024 (14:01 IST)
வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.6 லட்சம் வழங்கப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது.
 
கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள முண்டக்கை, சூரல்மலை உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவால் ஏராளமான மக்கள் மண்ணில் புதைந்தனர். போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் நடைபெற்ற நிலையில் மண்ணில் புதைந்து உயிரிழந்த நிலையில் ஏராளமான சடலங்கள் மீட்கப்பட்டன. 
 
நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 500 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட மேலும் பலர்  சிகிச்சை பெற்று வருகின்றனர். வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.6 லட்சம் வழங்கப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது. 

 
நிலச்சரிவால் படுகாயமடைந்த நபர்களுக்கு ரூ.50,000 நிதியுதவி வழங்கப்படும் என்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6,000 வாடகை உதவித் தொகையாக வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாடப்புத்தக விலை உயர்த்தப்பட்டது ஏன்: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் விளக்கம்..!