Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கப்பலை கைது செய்ய உத்தரவிட்ட கேரள நீதிமன்றம்.. ரூ.9,531 கோடி இழப்பீடு தந்தால் தான் விடுவிப்பு..!

Siva
புதன், 9 ஜூலை 2025 (16:33 IST)
கேரளாவில் கப்பலை கைது செய்ய கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும், ரூ.9,531 கோடியை இழப்பீடாக கொடுத்தால் மட்டுமே அந்த கப்பலை விடுவிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கேரளாவில் கடந்த மே மாதம் ஆலப்புழா கடற்கரையில் கப்பல் ஒன்று மூழ்கியதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டது. இதனை அடுத்து, அந்தக் கப்பல் நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டு ரூ.6 கோடி டெபாசிட் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.  
 
இந்த நிலையில், அதே நிறுவனத்தின் மற்றொரு கப்பல் தற்போது கேரளாவுக்கு வந்த நிலையில், அந்த கப்பலை கைது செய்ய கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மே மாதம் மூழ்கிய கப்பலால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புக்கு ரூ.9,531 கோடி இழப்பீடு கேட்டு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தான் இந்தக் கப்பல் கைது செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் கப்பல் நிறுவனம் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளது. 
 
மே மாதம் மூழ்கிய கப்பலால் கேரளாவில் உள்ள கடலோரப் பகுதிகள் சுற்றுச்சூழல் பெரும் அளவில் பாதிக்கப்பட்டதாகவும், அதற்காகத்தான் இந்த இழப்பீடு என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
 
இந்தியாவில் ஏற்கனவே மும்பை மற்றும் சென்னையில் கப்பல்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது கேரளாவிலும் ஒரு கப்பல் கைது செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கப்பலை கைது செய்ய உத்தரவிட்ட கேரள நீதிமன்றம்.. ரூ.9,531 கோடி இழப்பீடு தந்தால் தான் விடுவிப்பு..!

14 நாடுகளுக்கு கூடுதல் வரி.. இனி மாத்த மாட்டேன்! - இடியை இறக்கிய ட்ரம்ப்!

பைக்கை நிறுத்தி போக்குவரத்து காவலர் ஒரே ஒரு கேள்வி.. கதறி அழுத சென்னை இளம்பெண்..!

கேரள பள்ளிகள் இனி கடைசி பெஞ்ச் கிடையாது! முதல் பெஞ்ச்சும் கிடையாது! - ஏன் தெரியுமா?

போதை பொருட்களை உற்பத்தி செய்த அறிவியல் - இயற்பியல் ஆசியர்கள் கைது.. ரூ.15 கோடிக்கு விற்பனையா?

அடுத்த கட்டுரையில்
Show comments