Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வீடு பற்றி எரிந்து குடும்பமே பலி! விபத்தா? கொலையா? தற்கொலையா? – போலீஸார் விசாரணை!

Advertiesment
வீடு பற்றி எரிந்து குடும்பமே பலி! விபத்தா? கொலையா? தற்கொலையா? – போலீஸார் விசாரணை!
, செவ்வாய், 8 மார்ச் 2022 (13:12 IST)
கேரளாவின் திருவனந்தபுரத்தில் வீடு தீ பற்றியதில் குடும்பமே எரிந்து பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் வர்கலா நகரை சேர்ந்தவர் பிரதாபன். இவர் அப்பகுதியில் உள்ள புத்தன் சந்தையில் காய்கறி கடை நடத்தி வந்துள்ளார். பிரதாபன் தனது மனைவி, மகன், மருமகள் மற்றும் அவர்கள் குழந்தை என ஐந்து பேரும் தங்களது சொந்த வீட்டின் இரண்டாம் தளத்தில் வசித்து வந்துள்ளனர்.

இன்று அதிகாலை 1.45 அளவில் பிரதாபன் வீட்டிலிருந்து கரும்புகை வெளியேறுவதை அக்கம்பக்கத்தினர் கவனித்துள்ளனர். உடனடியாக இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது பிரதாபன் உள்ளிட்ட குடும்பத்தினர் 5 பேரும் தீயில் கருகி பலியாகியுள்ளனர்.

மின்கசிவு காரணமா என ஆராய்ந்ததில் மின்கசிவு ஏற்பட்டதற்கான சுவடுகள் இல்லை என கூறப்படுகிறது. அதேசமயம் தீ பற்றும் முன்னதாக 5 இரு சக்கர வாகனங்களில் மர்ம நபர்கள் அந்த பக்கமாக சென்றதாகவும் சிலர் கூறியுள்ளனர். இதனால் இந்த சம்பவம் விபத்தா, கொலையா, தற்கொலையா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெயலலிதா மரண விசாரணை ஆணையம்: ஓபிஎஸ்-க்கு சம்மன் அனுப்ப திட்டம்!