தொற்று பரவலை கட்டுபடுத்த முடியவில்லை என்று முதல்வர் பினராயி விஜயன் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்துள்ளது.
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் மட்டும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கேரளாவில் தொடர்ந்து 3 வது நாளாக இன்று கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியது. இந்தியாவில் தினசரி நோயாளிகள் எண்ணிக்கையில் 60 சதவீதத்திற்கு மேல் கேரளாவில் தான் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கேரள அரசின் தவறான நடவடிக்கையால் தான் கொரோனா அதிகமாக பரவுகிறது என்று காங்கிரஸ், பாஜக உள்பட எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அரசு அலட்சியமாக இருக்கிறது. ஆகவே தொற்று பரவலை கட்டுபடுத்த முடியவில்லை என்று முதல்வர் பினராயி விஜயன் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்துள்ளது.