Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வேட்டையை துவங்கிய அமெரிக்க படை! சொன்னபடி செய்த பைடன்

Advertiesment
ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ்.கோராசன் பயங்கரவாதிகளை குறிவைத்து ட்ரோன் மூலம் தாக்குதலை தொடங்கியுள்ளது அமெரிக்கா. 
 
ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில் மக்கள் வேகவேகமாக வெளியேறி வருகின்றனர். இந்நிலையில் ஆப்கன் தலைநகர் காபூல் விமான நிலையம் அருகே நடந்த வெடிக்குண்டு தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் உட்பட 100 பேர் உயிரிழந்துள்ளனர்.
 
இந்நிலையில் அமெரிக்க அதிபர் பைடன் இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். அதேபோல காபூல் குண்டுவெடிப்பை மறக்க மாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம். தேடிவந்து வேட்டையாடுவோம் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.
 
சொன்னபடி தற்போது ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ்.கோராசன் பயங்கரவாதிகளை குறிவைத்து ட்ரோன் மூலம் தாக்குதலை தொடங்கியுள்ளது அமெரிக்கா.  தாக்குதல் தொடங்கப்பட்டுள்ளதால் காபூல் விமான நிலையத்திலிருந்து அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேறும்படி அறிவிக்கப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கேரளாவில் கோர முகம் காட்டும் கொரோனா!