டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் என டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், அரவிந்த் கெஜ்ரிவாலை நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை ஆஜர்படுத்திய நிலையில் அமலாக்கத்துறை கோரிக்கையை ஏற்று ஏப்ரல் 15 வரை நீதிமன்ற காவலில் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களை வைக்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
முன்னதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 1 ஆம் தேதி வரை காவல் நீடித்து நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்த நிலையில் இன்று அவர் நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர் செய்யப்பட்ட நிலையில் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மதுபான கொள்கை ஊழல் வழக்கில் ஆம் ஆத்மி கட்சி ரூ.100 கோடி ஆதாயம் அடைந்ததாக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை அமலாக்கத் துறை கடந்த மாதம் 21-ம் தேதி கைது செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.