பிரதமர் மோடியை சந்திக்க காஷ்மீர் இளைஞர் ஒருவர் நெடுந்தூரம் நடந்தே வந்தது வைரலாகியுள்ளது.
இந்தியாவின் நாடாளுமன்ற தேர்தலில் தொடர்ந்து இரண்டாவது முறையாக பாஜக வென்ற நிலையில் தொடர்ந்து இரண்டாவது முறையும் பிரதமராக நீடித்து வருகிறார் பிரதமர் மோடி. இந்நிலையில் அவ்வபோது பிரதமர் மோடியை காண சைக்கிளிலேயே பயணிப்பது, பைக்கிலேயே பயணிப்பது போன்ற சாகசங்களை பலர் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் காஷ்மீரை சேர்ந்த ஃபாசிம் நஷீர் என்ற இளைஞர் பிரதமர் மோடிக்கு பெரும் ரசிகராக இருந்து வரும் நிலையில் பிரதமரை காண நடந்தே வருவது என முடிவெடுத்துள்ளார். இதற்காக காஷ்மீரிலிருந்து டெல்லி வரை சுமார் 815 கி.மீ தூரம் நடந்தே வந்து சேர்ந்துள்ளார் நஷீர். பிரதமர் மோடியை சந்திக்காமல் செல்லப்போவதில்லை என கூறும் அவர் கவனம் ஈர்க்கவே இவ்வாறு நடந்து வந்ததாக கூறியுள்ளார்.