இந்தியாவில் சிறுதொழில் முன்னேற்றத்திற்காக லோன் வழங்குவதற்கு ஃபேஸ்புக் நிறுவனம் முடிவெடுத்துள்ளது.
இந்தியாவில் கொரோனா காரணமாக விடுக்கப்பட்ட ஊரடங்கால் கடந்த ஒன்ரறை ஆண்டுகளில் பெரும்பாலான சிறுதொழில்கள் முடங்கி போயுள்ளன. இந்நிலையில் சிறுதொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு ஃபேஸ்புக் சில நிறுவனங்களுடன் இணைந்து கடன் வழங்கும் திட்டத்தை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த கடன் வசதி மூலம் ரூ.5 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை கடன் பெற முடியும் என்றும், இந்த திட்டத்தில் முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த கடன் வசதியில் கடன் பெறுவோருக்கு ஆண்டுக்கு 17 சதவீதத்திற்குள் வட்டி இருக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்த விரிவான தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.