Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வீட்டுச்சிறையில் இருக்கும் காஷ்மீர் தலைவர்கள் – ஒன்றரை ஆண்டுகளில் விடுதலை !

Advertiesment
வீட்டுச்சிறையில் இருக்கும் காஷ்மீர் தலைவர்கள் – ஒன்றரை ஆண்டுகளில் விடுதலை !
, புதன், 18 செப்டம்பர் 2019 (07:45 IST)
காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து பறிக்கப்பட்ட பின் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ள அதன் தலைவர்கள் அனைவரும் 18 மாதங்களில் விடுதலை செய்யப்படுவார்கள் என பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜித்தேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி மத்திய அரசு நீக்கியதை தொடர்ந்து காஷ்மீரின் பலகட்சிகளை சேர்ந்த அரசியல் தலைவர்கள் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். ஆனால் இவர்களுடன் காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா வீட்டுச் சிறையில் வைக்கப்படவில்லை என உள்துறை அமைச்சகம் தெரிவித்தது. இந்நிலையில் அவர் எங்கே என வைகோ தொடர்ந்த ஹேபியஸ் கார்பஸ் மனுவிற்கு மத்திய அரசு செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும்.

இந்நிலையில் வீட்டுச்சிறையில் இருக்கும் முன்னாள் முதல்வர்கள் ஃபரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா, மெகபூபா உள்ளிட்ட தலைவர்கள் எப்போது விடுதலை செய்யப்படுவார்கள் என ஊடகங்கள் கேள்வி எழுப்பியுள்ளன. இதற்கு பதிலளிக்கும் விதமாகப் பேசிய பிரதமர் அலுவலக இணையமைச்சரான ஜித்தேந்திர சிங் ‘ சிறையில் அடைக்கப்பட்டுள்ள எல்லா எதிர்க்கட்சித் தலைவர்களும் 18 மாதங்களுக்குள் விடுதலை செய்யப்படுவார்கள்’ எனக் கூறியுள்ளார்.

அதனால் அவர்கள் அனைவரும் இன்னும் ஒரு வருடத்துக்கு மேல் வீட்டுக்காவலில் வைக்கப்படுவது உறுதி என்பதை மறைமுகமாக பேசியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மோடியை சந்திக்கும் முன் அவரது மனைவியை சந்தித்த மம்தா பானர்ஜி