Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டிரெண்டாகும் காஷ்மீர்: இந்தியா முழுவதும் ஒருமித குரல்!!

டிரெண்டாகும் காஷ்மீர்: இந்தியா முழுவதும் ஒருமித குரல்!!
, திங்கள், 5 ஆகஸ்ட் 2019 (10:26 IST)
காஷ்மீரில் நிலவும் சூழல் சரிசெய்யப்பட வேண்டும் என்று இணையவாசிகள் அனைவரும் பிராத்தனை செய்து வருகின்றனர். 
 
ஜம்மு காஷ்மீரில் அசாதரண சூழ்நிலை நிலவி வரும் நிலையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தற்போதைய சூழல் குறித்து விவாதிக்கப்பட்டது.  
 
ஜம்முவில் நேற்று நள்ளிரவு முதல் இணையம் மற்றும் தொலைபேசி சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதோடு, பல்வேறு பகுதிகளில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 
 
பள்ளிகள், கல்லூரிகள் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை இந்த விடுமுறை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
webdunia
மேலும், காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, மெஹ்பூபா முப்தி, மக்கள் மாநாட்டுக் கட்சித் தலைவர் சஜத் லோன் ஆகியோர் நள்ளிரவு முதல் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
 
காஷ்மீரில் உள்ள சூழ்நிலை சரியாக இணையவாசிகள் அறிவுறுத்தி வருகிறார்கள். மேலும் பலரும் அங்குள்ள மோசமான நிலையையும் பதிவிட்டு வருகிறார்கள். ஒவ்வொரு இந்தியரும் காஷ்மீருக்காக குரல் கொடுத்து வருகின்றனர். 
 
#operationkasmir, #SaveKashmirSOS, #IndiaForKashmir, #StandwithKashmir, #JammuAndKashmir, #KashmirParFinalFight, #KashmirHamaraHai என்ற ஹேஷ்டேக்குகள் டிவிட்டரில் டிரெண்டாக்கி வருகின்றனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெண்ணின் வயிற்றில் பஞ்சுத் துணி – பிரசவித்த 5 நாளில் உயிரிழந்த சோகம் !