பஹல்காம் சுற்றுலா சென்ற 70 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம்.. குற்றவாளிக்கு ஜாமின் மறுத்த நீதிமன்றம்..!

Mahendran
திங்கள், 30 ஜூன் 2025 (16:10 IST)
பஹல்காம் சுற்றுலா தலத்தில், ஒரு ஹோட்டல் அறையில் 70 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நபரின் ஜாமீன் மனுவை ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக் நீதிமன்றம் நீதிமன்றம் நிராகரித்தது. 
 
தீவிரவாதிகளின் தாக்குதலால் 26 பேர் உயிரிழந்த நினைவுகளில் இருந்து மீண்டு வரும் பஹல்காமில் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்த வழக்கு குறித்து நீதிபதிகள் தெரிவித்தபோது,  ‘சமூகத்தின் "ஒழுக்கச் சீரழிவை காட்டுவதாகவும் அந்த மூதாட்டி இந்த அதிர்ச்சிகரமான அனுபவத்தை தனது காஷ்மீர் பயணத்தின் பயங்கரமான நினைவாக வாழ்நாள் முழுவதும் சுமக்க வேண்டியுள்ளதே என்று  வேதனை தெரிவித்தனர்.
 
மேலும் இத்தகைய கொடூரமான தாக்குதலில் குற்றம் சாட்டப்பட்டவரை விடுவிப்பது தவறான முன்னுதாரணத்தை உருவாக்கும் என்பதால் ஜாமின் மனுவை நீதிமன்றம் நிராகரித்தது. இப்படியே போனால் பஹல்காம் சுற்றுலாவுக்கு உகந்த இடமாக இருக்காது எனவும் நீதிபதி கடும் எச்சரிக்கை விடுத்தார்.
 
முன்னதாக, குற்றம் சாட்டப்பட்ட அஹ்மத், தன்னை போலீஸ் தவறாக குற்றம் சாட்டியுள்ளதாக வாதிட்டார். பாதிக்கப்பட்டவர் தன்னை வன்கொடுமை செய்தவர் என்று முறையாக அடையாளம் காணவில்லை என்றும், தான் அதிகாரிகளுக்கு தொடர்ந்து ஒத்துழைப்பதாகவும் அவர் வாதிட்டது குறிப்பிடத்தக்கது.
 
போலீஸ் விசாரணையின்படி அஹ்மத்  அந்த மூதாட்டி ஹோட்டல் அறைக்குள் நுழைந்து, ஒரு போர்வையால் அவரது வாயை அடைத்து, வன்கொடுமை செய்துவிட்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரேசில் புகைப்பட கலைஞரின் இன்ஸ்டாகிராம் கணக்கு நீக்கம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டால் ஏற்பட்ட சிக்கல்!

பொது இடத்தில் சிறுநீர் கழித்த வீடியோ வைரல்.. அவமானத்தில் தற்கொலை செய்த இளைஞர்..

ஜி20 உச்சிமாநாட்டில் பங்கேற்க மாட்டேன்.. டிரம்ப் அறிவிப்பு.. அப்ப மோடி கலந்து கொள்வாரா?

தேர்தலில் தோல்வி அடைந்தால் பதவிகள் பறிக்கப்படும்: முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை..!

தமிழகத்தில் மீண்டும் பரவும் டெங்கு காய்ச்சல்!.. சுகாதாரத்துறை எச்சரிக்கை!...

அடுத்த கட்டுரையில்