காஷ்மீர் எல்லைக்குள் நுழைய பாகிஸ்தான் பயங்கரவாதிகள் திட்டமிட்டு வருவதாக எல்லை பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டுவிட்ட நிலையிலும் காஷ்மீரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுறுவல் தொடர்ந்து வருகிறது. இதனால் அவ்வபோது எல்லை பாதுகாப்பு படைக்கும், பயங்கரவாதிகளுக்குமிடையே துப்பாக்கி சூடு போன்ற சம்பவங்களும் நடைபெறுகின்றன.
இந்நிலையில் பயங்கரவாதிகள் ஊடுறுவல் குறித்து பேசியுள்ள எல்லை பாதுகாப்பு படை ஐ,ஜி ராஜா பாபு சிங் “இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே சண்டைநிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபிறகு, எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் பொதுவாக அமைதி நிலவுகிறது. 2019-ம் ஆண்டின் 130 பேர், 2020-ம் ஆண்டின் 36 பேருடன் ஒப்பிடும்போது கடந்த ஆண்டில் 31 பேர்தான் ஊடுருவியிருக்கிறார்கள். பயங்கரவாதிகளின் ஊடுறுவல் முயற்சிகள் தொடர்ந்து முறியடிக்கப்பட்டு வருகின்றன” என தெரிவித்துள்ளார்.