Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரதமர் காஷ்மீர் பயணம்; கிராமத்தில் திடீர் குண்டுவெடிப்பு! – காஷ்மீரில் பரபரப்பு!

Advertiesment
பிரதமர் காஷ்மீர் பயணம்; கிராமத்தில் திடீர் குண்டுவெடிப்பு! – காஷ்மீரில் பரபரப்பு!
, ஞாயிறு, 24 ஏப்ரல் 2022 (11:58 IST)
பிரதமர் மோடி இன்று காஷ்மீர் சென்றுள்ள நிலையில் அங்குள்ள ஒரு கிராமத்தில் குண்டு வெடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று தேசிய பஞ்சாயத்ராஜ் தினம் கொண்டாடப்படும் நிலையில் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் கிராமசபை கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.

இந்நிலையில் காஷ்மீர் மாநிலம் சம்பா மாவட்டத்தில் உள்ள பள்ளி பஞ்சாயத்து பகுதியில் நடைபெறும் பஞ்சாயத்ராஜ் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேச உள்ளார். இதற்காக இன்று பிரதமர் மோடி காஷ்மீர் சென்றுள்ளார்.

இந்நிலையில் ஜம்முவின் பிஷ்னா பகுதியில் உள்ள லாலியன் என்னும் கிராமத்தில் விவசாய பகுதியில் திடீர் குண்டுவெடிப்பு நடந்துள்ளது. இதுகுறித்து உள்ளூர் மக்கள் அளித்த தகவலின் பேரில் போலீஸார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அதேசமயம் பிரதமர் கலந்து கொள்ள உள்ள பள்ளி பஞ்சாயத்து கிராமத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விண்வெளியை குப்பையாக்கும் எலான் மஸ்க்? – மேலும் 53 Starlink Satellites launch!