Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கர்நாடகாவில் கருணாநிதியின் மகளின் வீடு முற்றுகை: போலீஸ் குவிப்பு!

கர்நாடகாவில் கருணாநிதியின் மகளின் வீடு முற்றுகை: போலீஸ் குவிப்பு!

கர்நாடகாவில் கருணாநிதியின் மகளின் வீடு முற்றுகை: போலீஸ் குவிப்பு!
, புதன், 14 செப்டம்பர் 2016 (10:07 IST)
காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட்டதை கண்டித்து கர்நாடகாவில் தொடர் வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கர்நாடகாவில் உள்ள கருணாநிதியின் மகள் செல்வியின் பண்ணை வீட்டை நேற்று போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர்.


 
 
தமிழர்கள் மீது தாக்குதல், தமிழக பஸ்கள், லாரிகள் எரிக்கப்பட்டதையடுத்து பெங்களூரில் 144 தடை உத்தரவு போடப்பட்டது. ஒரு சில இடங்களில் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.
 
நிலைமையை கட்டுப்படுத்த முடியாமல் துணை ராணுவப்படையும் குவிக்கப்பட்டது. தொடர்ந்து கலவர்ம் நீடித்ததால் போலிசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலியானார்கள்.
 
எங்கு நோக்கினும் தமிழர்களுக்கு எதிரான கோஷங்களே கர்நாடகத்தில். தமிழர்களுக்கு சொந்தமான நிறுவனங்கள், கடைகளை அடித்து நொறுக்கி வருகின்றனர் கன்னட வெறியர்கள்.
 
பெங்களூர் அருகே உள்ள கனகபுரா ரோட்டில் திமுக தலைவர் கருணாநிதியின் மகள் செல்விக்கு சொந்தமான பண்ணை வீடு ஒன்று உள்ளது. இந்த வீட்டை நேற்று திடீரென கன்னட வெறியர்கள் முற்றுகையிட்டனர்.
 
தமிழகத்துக்கு எதிரான கோஷங்களை எழுப்பி, செல்வியின் வீட்டை அரசு கையகப்படுத்த வேண்டும் என அத்துமீறி முற்றுகையிட்டனர். செல்வியின் வீட்டின் இரும்பு கதவின் வழியே ஏறி வீட்டின் உள்ளே செல்ல முயற்சித்தபோது காவல்துறையினர் அதனை தடுத்து நிறுத்தினர்.
 
இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான வாக்குவதம் நீடித்தது. பின்னர் அவர்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் அதிகாரிகள் அவர்களை அங்கிருந்து கலைந்து போகச்செய்தனர். இதனையடுத்து செல்வியின் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
 
பின்னர் செல்வியின் பண்ணை வீட்டின் இரும்பு கதவின் வழியாக ஏறி கன்னட அமைப்பினர் உள்ளே குதிக்க முயன்றனர். உடனே போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும் கன்னட அமைப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
 
பின்னர் அவர்களிடம் போலீஸ் அதிகாரிகள் நடத்திய சமாதான பேச்சால் அவர்கள் கலைந்து சென்றனர். இதையடுத்து, செல்வியின் பண்ணை வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’கொடூரம்’ - திமுக நகர செயலர் வெட்டிக்கொலை!