விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த செல்வராஜ் அம்மாவட்டதில் திமுக நகர செயலாளராக இருக்கிறார்.
இன்று அதிகாலை விழுப்புரத்தில், ஆள் நடமாட்டம் குறைவான ரயில்வே பழைய குடியிருப்புப் பகுதியில், அவர் நடைப்பயிற்சி சென்றபோது, இருக்கசக்கர வாகனத்தில் அறிவாளுடன் வந்த ஆறு மர்ம நபர்கள் அவரை வெட்டிப் படுகொலை செய்துள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் விழுப்புரத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
மரணமடைந்த செல்வராஜ் திமுக முன்னாள் அமைச்சரும், தற்போதய திருக்கோவிலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான பொன்முடியின் உதவியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.