கர்நாடகாவில் இரு சக்கர வாகனத்தில் டபுள்ஸ் பயணிக்க அரசு தடை விதிக்கப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இரு சக்கர வாகனத்தில் மூன்று பேர் பயணிக்க கூடாது என்பது நடைமுறையில் இருக்கம் வழக்கம். ஆனால், தற்போது இரண்டு பேர் கூட செல்ல கூடாது என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
அதாவது, கர்நாடகாவில் 100 சிசி-க்கு குறைவான இரு சக்கர வாகனங்களில் டபுள்ஸ் செல்வதை தடை செய்ய அரசு முடிவு செய்துள்ளது.
கர்நாடகாவில் இருசக்கர வாகன விபத்துகளில் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் இந்த முடிவு எடுக்கப்படவுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த புதிய தடையினால் கர்நாடக மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் கொண்டு வர கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி பின்வருமாறு கூறப்பட்டுள்ளது,
# 100 சிசி-க்கு குறைவான இரு சக்கர வாகனங்களில் டபுள்ஸ் செல்ல தடை.
# 50 சிசி இரு சக்கர வாகனங்கள் விரைவில் தயாரிக்கப்பட்டு நடைமுறைக்கு வரும்.
# 50 சிசி வாகனங்கள் பின்பக்க சீட் இல்லாமல் தயாரிக்கப்படும்.