6 நாட்டு மக்களுக்கு தடை விதித்து பல்பு வாங்கிய டிரம்ப்...
, வியாழன், 19 அக்டோபர் 2017 (10:54 IST)
ஆறு நாடுகளை சேர்ந்த பயணிகள் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் நுழையக்கூடாது என அமெரிக்க அதிபர் விதித்த தடைக்கு, நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், சிரியா மற்றும் ஏமன் ஆகிய ஆறு முஸ்லீம் நாடுகளை சேர்ந்த பயணிகள் மற்றும் வெனிசுலாவை சேர்ந்த சில குறிப்பிட்ட அதிகாரிகள் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் நுழைவதற்கு சமீபத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தடை விதித்தார்.
ஆனால், பிறநாட்டு பயணிகள் அமெரிக்காவில் நுழைவதற்கு தடை விதிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை எனக் கூறி ஒருவர் ஹவாய் மாகாணத்தின் உள்ளூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, டிரம்பின் கட்டுப்பாடுகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.
குறிப்பிட்ட நாடுகளை சேர்ந்த 15 கோடி பேர் அமெரிக்க வருவதால், பாதுகாப்பிற்கு தீங்கு ஏற்படும் என்பதற்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை. முஸ்லீம்களை குறிவைத்து எதிர்ப்பது, மத சுதந்திரத்தை பாதுகாக்கும் அமெரிக்க அரசியல் அமைப்பு சட்ட விதிகளை மீறும் செயல் என நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.
அடுத்த கட்டுரையில்