கர்நாடகாவால் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள மராத்திய பிரதேசங்களை விடுவிக்க கோரி சர்ச்சை கோரிக்கையை உத்தவ் தாக்கரே முன்வைத்துள்ளார்.
மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே சமீபத்தில் சர்ச்சைக்குரிய கோரிக்கையை முன்வைத்துள்ளார். இது குறித்து அவர் கோரியதாவது, மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்ட போது, பெலகாவி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் கர்நாடகத்துடன் இணைக்கப்பட்டன.
ஆனால் அப்பகுதி மக்கள் பெருவாரியாக மராத்தி மொழி பேசுகின்றனர். அப்பகுதிகளை அதாவது மராத்திய பிரதேசங்களை கர்நாடகா ஆக்கிரமித்துள்ளது. இப்போது கர்நாடகாவில் எடியூரப்பா தலைமையிலான ஆட்சி நடக்கிறது. எனவே, பெலகாவி பகுதிகளை தங்களிடம் ஒப்படைக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்று கேட்டுள்ளார்.