மது கடைகளில் மது வாங்கும் வயது 21-லிருந்து 18 ஆக குறைக்கப்படும் என சமீபத்தில் கர்நாடக மாநில அரசு அறிவித்திருந்த நிலையில் கடும் எதிர்ப்பு காரணமாக அந்த அறிவிப்பை கைவிட்டு விட்டதாக கூறப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் மட்டுமின்றி பல மாநிலங்களில் மது விற்பனை தான் அரசின் முக்கிய வருவாயாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் மது விற்பனையை அதிகரிப்பதற்காக மது வாங்கும் வயதை 21 இல் இருந்து 18 ஆக குறைக்கப்படும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள் காட்டும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து தற்போது அந்த அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளதாக கர்நாடகா அரசு தெரிவித்துள்ளது. மக்களின் நலன் கருதி இந்த முடிவு கைவிடப்பட்டுள்ளதாக கர்நாடக மாநில அரசு தெரிவித்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது