ராஜினாமா செய்யும் எண்ணமில்லை... எடியூரப்பா

Webdunia
சனி, 17 ஜூலை 2021 (15:03 IST)
முதல்வர் பதவியை ராஜினாமா செய்யக்கோரி யாரும் என்னிடம் கேட்கவில்லை என கர்நாடகா முதல்வர் எடியூரப்பா  தெரிவித்துள்ளார். 

 
கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சி நிறைவடைய இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கும் நிலையில் கர்நாடக பாஜகவில் நிலவும் உட்கட்சி மோதல் காரணமாக எடியூரப்பா பதவி விலக கோரிக்கை வலுத்துள்ளது.  
 
கர்நாடக அமைச்சர்கள் சிலரே எடியூரப்பாவுக்கு எதிராக போர்கொடி தூக்கியதால் கட்சி மேலிடம் விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், உடல் நிலையை காரணம் காட்டி கர்நாடக முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய எடியூரப்பா சம்மதம் என தகவல் வெளியாகியது. 
 
இந்நிலையில், கர்நாடக முதல்வர் எடியூரப்பா இது குறித்து கூறியதாவது, முதல்வர் பதவியை ராஜினாமா செய்யக்கோரி யாரும் என்னிடம் கேட்கவில்லை. அத்தகைய நிலைமையும் எழவில்லை என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நவம்பர் 27-ல் வங்கக் கடலில் மேலும் ஒரு தாழ்வு மண்டலம்! இந்திய வானிலை ஆய்வு மையம்

சீமான்தான் நம்பர் ஒன்!.. டிஜிட்டல் சர்வே மூலம் கிடைத்த ரிசல்ட்!..

வாக்காளர் பட்டியல் SIR படிவத்தை நிரப்ப ஏஐ தொழில்நுட்பம்: புதிய முயற்சி!

40 ஆண்டு அரசியல்.. 10 முறை முதல்வர்.. நிதிஷ்குமாரின் சொத்து மதிப்பு ரூ.1.64 கோடி, 13 பசுக்கள் தானா?

உலகிலேயே கஷ்டமில்லாத பணி கவர்னர் பணி.. கனிமொழி எம்பி கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments