Publish Date: Tue, 13 Jul 2021 (11:24 IST)
Updated Date: Tue, 13 Jul 2021 (11:58 IST)
கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் உருவ பொம்மையை எரித்து மன்னார்குடியில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட விடாபிடியாக முயன்று வருவது தொடர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு மேகதாது அணைக்கு மறுப்பு தெரிவித்து வரும் நிலையில் கர்நாடக அரசு அணை கட்டுவதில் தீவிரம் காட்டி வருகிறது.
இந்நிலையில் மேகதாது அணை விவகாரத்தை சட்ட ரீதியாக எதிர்கொள்வது மற்றும் அரசியல் நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு நேற்று அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவெடுத்து மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதனிடையே, கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் உருவபொம்மையை எரித்து மன்னார்குடியில் போராட்டம் நடைபெற்று வருகிறது. எடியூரப்பாவை கண்டித்து மன்னார்குடி பேருந்து நிலையம் முன்பு காவிரி உரிமை மீட்புக்குழுவினர் இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.