கன்னட மொழியில் பெயர் பலகை வைக்காத கடைகள் கன்னட அமைப்பினர்களால் உடைக்கப்பட்டு வருவதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூரில் கன்னட அமைப்பு ஒன்று திடீரென கன்னட மொழியில் பெயர் பலகை இல்லாத கடைகளின் பெயர் பலகையை உடைக்கும் போராட்டத்தை நடத்தி வருகிறது.
இதனை அடுத்து அந்த அமைப்பினரை போலீசார் தடுத்து நிறுத்திய நிலையில் போலீசாரையும் மீறி கன்னட மொழியில் பெயர் பலகை இல்லாத கடைகளின் பெயர் பலகைகளை உடைத்தனர். இதனால் போலீசாருக்கும் கன்னட அமைப்பினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இந்த நிலையில் பெங்களூர் நிர்வாகம் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி வரும் 6ஆம் தேதிக்குள் பெங்களூரில் உள்ள அனைத்து கடைகளிலும் கன்னட மொழியில் பெயர் பலகை குறிப்பிட வேண்டும் என்றும் ஒரு முழு பெயர் பலகையில் 60% இடத்தில் கன்னட மொழி பெயர் தான் இருக்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.