இந்தியாவின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திர போஸ் என சமீபத்தில் நடிகை கங்கனா ரனாவத் பேட்டி ஒன்றில் தெரிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது என்பதும் அவரை கேலி செய்து ஏராளமான மீம்ஸ் இணையதளங்களில் பதிவாகி வந்தது என்பதையும் பார்த்தோம்.
ஆனால் நடிகை கங்கனா ரனாவத் தான் சொல்வது உண்மைதான் என்று மீண்டும் ஒருமுறை கூறியிருப்பதை அடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர் இது குறித்து விளக்கம் அளித்த போது 1943 ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் தேதி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தன்னை இந்தியாவின் பிரதமர் என்று அறிவித்துக் கொண்டார் என்று கங்கனா ரனாவத் கூறி இருக்கிறார். இதனை பாஜகவினரும் ஆதரித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
ஆனால் கங்கனா ரனாவத் தனது பேட்டியில் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திரபோஸ் என்று தான் கூறினார் என்று எதிர்க்கட்சியினர் பதிலடி கொடுத்து வருகின்றனர்
எந்த துறையை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அரசியலுக்கு வந்து விட்ட பிறகு வரலாற்றை நன்கு அறிந்து கொண்டு பேச வேண்டும் என்றும் எதையும் படிக்காமல் உளறி கொட்டினால் இப்படித்தான் சிக்க வேண்டியது இருக்கும் என்றும் நெட்டிசன் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்
இந்த நிலையில் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மண்டி என்ற தொகுதியில் கங்கனா ரனாவத் பாஜக சார்பில் போட்டியிடுகிறார் என்பதும் அவர் தற்போது தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.