Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆபாச நடிகை என்று கூறிய விவகாரம்... கங்கனா ரணாவத் விளக்கம்

Advertiesment
ஆபாச நடிகை என்று கூறிய விவகாரம்... கங்கனா ரணாவத் விளக்கம்

Sinoj

, வியாழன், 28 மார்ச் 2024 (20:36 IST)
பாலிவுட் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர் ஊர்மிளா மடோன்கர். அதன்பினர், ரங்கீலா, சத்யா,  ஜூடோய் உள்ளிட்ட பல படங்கலில் நடித்திருந்தார்.
 
இவர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்தியன் முதல்  பாகத்தில் நடித்து, தமிழ் ரசிகர்களிடம்  கவனம் பெற்றார்.
 
சினிமாவில் நடிப்பதை தொடர்ந்து அரசியலில் களமிறங்கிய ஊர்மிளா கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார். 
 
அதன்பின்னர், 2020 ஆம் ஆண்டு சிவசேனா கட்சியில் இணைந்தார். ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் நடிகை கங்கனா ரனாவத்தை கடுமையாக விமர்சித்தார்.
 
இதற்கு பதிலளித்த கங்கனா ரனாவத், என்னைப் பற்றி ஊர்மிளா பேசியதைப் பார்த்தேன். தேர்தலில் போட்டியிடுவது அவ்வளவு சிரமமில்லை. ஊர்மிளா ஒரு வகையில் ஆபாச நடிகை தான். அவரது நடிப்பு திறனுக்காக அவர் அறியப்படவில்லை. அவருக்கே தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கிடைக்கும்போது எனக்குக் கிடைக்காதா? என்று தெரிவித்தார்.
 
சமீபத்தில் கங்கனா ரணாவத் பாஜக சார்பில் இமாச்சர பிரதேசத்தின் மண்டி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். 
 
சமீபத்தில் காங்கிரஸ் செய்தித்தொடர்பாலர் சுப்ரியா ஸ்ரீனேட்டின் தன் வலைதள பக்கத்தில் கங்கனா ரணாவத் பற்றி ஒரு பதிவிட்டிருந்தார். இது சர்ச்சையானது.
 
இதற்கு கங்கனா கண்டனம் தெரிவித்தார். இந்த நிலையில்தான் கங்கனா ரனாவத் கடந்த 2020 ஆம் ஆண்டு ஊர்மிளா பற்றி பேசிய வீடியோவும் பரவி வருகிறது. 
 
இதற்கு கங்கனா ரணாவத் விளக்கம் அளித்துள்ளார். அதில்,  ஆபாச நட்சத்திரம், ஆபாச நடிகை என்பது இழிவான சொல்லா. இந்தியாவில் வேறெங்கும் இல்லாத அளவிற்கு இந்தியாவில் ஆபாச நட்சத்திரங்களுக்கு கிடைக்கும் மரியாதை பற்றி சன்னிலியோனிடம் கேளுங்கள்.  நான் எதையும் நியாயப்படுத்தவில்லை, கவர்ச்சி பெண் ஷூலா கி  ஜவானி போன்ற வார்தைகளால் நடிகைகளுக்கு ஏற்புடையதாக இருந்தால் இதை ஏன் இழிவாக பார்க்க வேண்டும்? எந்த தனிப்பட்ட விதத்திலும் ஊர்மிளா மடோன்கரை நான் அவமதிக்க வேண்டும் என்று எண்ணவில்லை என்றார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரபல நடிகையின் ஆடையை மிதித்த அக்‌ஷய்குமார்