Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெருக்கடியை தவிர்க்க ராஜினாமா? பலம் இழக்கும் காங்கிரஸ்!

Webdunia
செவ்வாய், 2 ஜூலை 2019 (09:44 IST)
தேர்தல் தோல்விக்கு பொறுப்பு ஏற்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 2 மாநில முதல்வர்கள் ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளனர். 
 
மக்களவை தேர்தல் முடிவில் காங்கிரஸ் கட்சி மோசமான தோல்வியை பதிவு செய்தது. இதனை தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக ராகுல் காந்தி தெரிவித்தார். ஆனால், காங்கிரஸ் கமிட்டியின் முக்கிய தலைவர்கல் இதை ஏற்கவில்லை. 
 
இந்நிலையில், தேர்தல் தோல்விக்கு பொறுப்பு ஏற்று காங்கிரசை சேர்ந்த இரண்டு மாநில முதல்வர்களான அசோக் கெலாட் மற்றும் கமல்நாத் பதவியை ராஜினாமா செய்ய முன்வந்துள்ளனர். டெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்த பின்னர் இந்த முடிவை அவர்கள் வெளியிட்டனர். 
சமீபத்தில் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை, மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஷ்கர் முதல்வர் பூபேஷ் பேகல், பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங், புதுச்சேரி முதல்வர் நாரயணசாமி ஆகியோர் சந்தித்தனர். 
 
இதற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அசோக் கெலாட், தேர்தல் தோல்விக்கு பொறுப்பு ஏற்று தாமும், கமல்நாத்தும் ராஜினாமா கடிதம் அளித்துள்ளதாகவும், இதுகுறித்து கட்சித் தலைமை முடிவு எடுக்கும் என்றும் கூறினார்.
 
கமல்நாத் தனது ஆட்சியை மத்திய பிரதேசத்தில் தக்கவைக்க போராடி நிலையில், வேறு வழியில்லாமல் ராஜினாமா செய்ய உள்ளதாக டெல்லி தகவல் தெரிவிக்கின்றன. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னேற்றத்தை பாத்து வயிற்றெரிச்சல்! அச்சுறுத்தலுக்கு அடிபணிய மாட்டோம்! - அமெரிக்காவுக்கு வெங்கயா நாயுடு கண்டனம்!

கோவில் கட்டுமான பணியில் திடீர் விபத்து.. 15-க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!

இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை பார்க்க மாட்டேன்: ஒவைசி அதிரடி..!

நான் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவதா? டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பு..!

காதில் ஊற்றப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து.. யூடியூப் வீடியோ பார்த்து கணவனை கொலை செய்த மனைவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments