Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கமல்ஹாசன் பாராட்டிய சுதந்திர தின விழா - வைரல் புகைப்படம்

Advertiesment
கமல்ஹாசன் பாராட்டிய சுதந்திர தின விழா - வைரல் புகைப்படம்
, புதன், 16 ஆகஸ்ட் 2017 (14:32 IST)
இந்தியாவின் 71வது சுதந்திர தின விழா நேற்று நாடெங்கும் கொண்டாடப்பட்டது.


 

 
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில், மழை நீரில் காலளவு தண்ணீர் தேங்கி நிற்கும் ஒரு பள்ளியில் நேற்று தேசியக் கொடியை ஏற்றி ஒரு வயதானவரும், 3 சிறுவர்களும் வணக்கம் செலுத்துகின்றனர். 

webdunia

 

 
துப்ரி மாவட்டத்தில் உள்ள நோஸ்கரா எனும் இடத்தில் உள்ள ஒரு பள்ளியில் இப்புகைப்படம் எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ள கமல்ஹாசன் “நாம் நம் நாட்டை நம்புவதற்கு இது ஒரு சிறந்த உதாரணம் எனவும், இதை புரியாத அரசியல்வாதிகள் ஏற்கனவே தோற்றுவிட்டார்கள். நாட்டிற்கு சேவை செய்யுங்கள். இது ஒரு சிறந்த புகைப்படம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நொடிக்கு 112 ஜிபி; 300 மடங்கு அதிக இணையவேகம்: இனஃப்ராரெட் வைபை!!