Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா முடிஞ்சது.. விண்வெளிக்கு போகலாமா? – சூடுபிடிக்கும் ககன்யான் திட்டம்!

Webdunia
திங்கள், 25 மே 2020 (11:37 IST)
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டதால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ககன்யான் திட்டம் மீண்டும் தொடங்கியுள்ளது.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இந்திய வீரர்களை விண்வெளிக்கு முதன்முறையாக அனுப்பும் ககன்யான் திட்டத்தை கடந்த ஆண்டு தொடங்கியது. 2022 ல் செயல்படுத்த உள்ள இந்த திட்டத்திற்கு இந்திய விமானப்படை வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய வீரர்களுக்கு ரஷ்யாவில் விண்வெளி பயிற்சிகள் அளிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவியதால் விண்வெளி பயிற்சிகள் நிறுத்தி  வைக்கப்பட்டன. தற்போது கொரோனா பாதிப்புகள் மெல்ல குறைந்து வரும் நிலையில் ககன்யான் திட்டத்திற்கான பணிகள் வேகமெடுத்துள்ளன.

இதுகுறித்து ரஷ்ய விண்வெளி கழகமான ரஷ்காஸ்மோஸ் வெளியிட்டுள்ள செய்தியில் இந்திய விண்வெளி வீரர்களுக்கு ககரின் விண்வெளி ஆராய்ச்சி மற்றும் வீரர்கள் சோதனை பயிற்சி மையத்தில் 4 இந்திய வீரர்களுக்கும் கடந்த 12ம் தேதி முதல் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக அளவில் இந்தியாவின் நன் மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம்: டாக்டர் கிருஷ்ணசாமி

தமிழகத்தில் கூடுதல் விமானங்களை இயக்குகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முழு விவரங்கள்..!

தவெக மாநாட்டுக்கு இடம் கொடுத்தவர்களுக்கு மரியாதை.. பொறுப்பாளர்களுக்கு தங்க மோதிரம்..!

கூட்டணியில் மட்டுமே பங்கு.. ஆட்சியில் எப்போதும் பங்கு கிடையாது: அமைச்சர் ஐ. பெரியசாமி

ராகுல் காந்தியை விட அதிக வாக்குகள் பெற்ற பிரியங்கா காந்தி. வயநாடு தொகுதி நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments