துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மருத்துவமனையில் அனுமதி!

Webdunia
திங்கள், 25 மே 2020 (11:30 IST)
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக சென்னையில் தினமும் 500க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையிலான அதிமுக அரசின் சீரிய முறையில் கொரோனா வைரசுக்கு எதிரான போரில் நடவடிக்கை எடுத்து வருகிறது 
 
தமிழக அரசின் ஆக்கபூர்வமான நடவடிக்கையால் கொரோனா வைரஸ் சென்னையை தவிர மற்ற பகுதிகளில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சற்று முன்னர் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதுகுறித்து துணை முதல்வருக்கு நெருக்கமானவர்கள் கூறியபோது, ‘வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக தான் தனியார் மருத்துவமனையில் துணை முதல்வர்அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்தி ஊடகங்களில் பரபரப்பாக வெளிவந்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதலமைச்சரை தவிர அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா.. புதிய அமைச்சர்கள் நாளை பதவியேற்பு..!

பிரதமர் மோடி பொதுக்கூட்ட இடத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் பலி.. ஆந்திராவில் சோகம்..!

4 கிலோ தங்கம், 7 கிலோ வெள்ளி, ரூ.1 கோடிக்கும் மேல் ரொக்கம்.. ஓய்வு பெற்ற அதிகாரி வீட்டில் சோதனை.!

திமுக-வின் ஃபெயிலியர் ஆட்சிக்கு முடிவுரை.. தமிழ்நாட்டில் மீண்டும் அதிமுகவின் பொற்கால ஆட்சி: ஈபிஎஸ்

மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை: சதுரகிரி மலை ஏறுவதற்கு தடை.. பக்தர்கள் அதிருப்தி..!

அடுத்த கட்டுரையில்
Show comments