Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குர்மித் ராம் ரஹீம் மீதான வழக்கில் இன்று தீர்ப்பு - பதட்டத்தில் ஹரியானா, பஞ்சாப்

குர்மித் ராம் ரஹீம் மீதான வழக்கில் இன்று தீர்ப்பு - பதட்டத்தில் ஹரியானா, பஞ்சாப்
, திங்கள், 28 ஆகஸ்ட் 2017 (10:40 IST)
பாலியல் பலாத்கார வழக்கில் குர்மீத் ராம் ரஹிம் சிங் குற்றவாளி தீர்ப்பளிக்கப்பட்டதை அடுத்து, அவரது ஆதரவாளர்கள் கடந்த 25ம் தேதி  கலவரத்தில் ஈடுபட்டனர்.


 


இதனால், ஹரியானா மற்றும் பஞ்சாப் ஆகிய பகுதிகளில் பெரும்பாலான இடங்கள் கலவர பூமியாக மாறியது. அந்த கலவரம் டெல்லி மாநில எல்லைப்பகுதி வரை பரவியது.
 
ஹரியானாவில் இரண்டு ரயில் நிலையங்கள், பெட்ரோல் பங்குகளுக்கு தீ வைக்கப்பட்டது. கலவரத்தில் இதுவரை பலர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக, ஹரியானா, பஞ்சாப் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் பெரும்பாலான பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

webdunia

 

 
இந்நிலையில், இந்த வழக்கின் தண்டனை விவரத்தை நீதிபதி இன்று மதியம் 2.30 மணியளவில் சிறையிலேயே அறிவிக்கவுள்ளார். கும்ரீத் மீதான பாலியல் குற்றச்சாட்டு உறுதியாகியுள்ளதால் அவருக்கு 7 வருட ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டால், அவரின் ஆதரவாளர்கள் மீண்டும் கலவரத்தில் ஈடுபடுவார்கள் என்பதால், ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மின்சார ரயில் மோதி 3 பேர் பலி - சென்னையில் அதிர்ச்சி