நீதிபதி வீட்டில் நடந்த அராஜகம் – குடும்பத்தோடு சேர்ந்து மருமகளை அடித்து வன்முறை !

சனி, 21 செப்டம்பர் 2019 (14:10 IST)
ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரின் வீட்டில் அவரது மருமகளை குடும்பமாக சேர்ந்து அனைவரும் அடித்து தொல்லைப்படுத்தும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

ஹைதராபாத் மற்றும் சென்னை உயர்நீதிமன்றங்களில் நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்ற நூட்டி ராமமோகன ராவ். இவர் மீது இவரது மருமகள் சிந்து ஷர்மா நூட்டி ராமமோகன ராவ், அவரது மனைவி நூட்டி துர்கா ஜெய லட்சுமி, தனது கணவர் நூட்டி வசிஸ்தா வரதட்சணைப் புகார் ஆகியோர் மீது புகார் கொடுத்திருந்தார். இது தொடர்பாக ஏப்ரல் 26-ம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் நீதிபதியின் குடும்பமே சேர்ந்து அவரது மருமகளைத் தாக்கும் காட்சிகள் கொண்ட வீடியோ சமீபத்தில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ காட்சிகள் பரபரப்பானதை அடுத்து வழக்கின் அடுத்தகட்ட விசாரணை விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் தமிழக பாஜக தலைவர் யார்? நாளை அறிவிப்பு? – பாஜக தேசிய பொது செயலாளர் சூசகம்