ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியின் 3 ஆவது கட்ட சோதனையை இந்தியாவில் மேற்கொள்ள மத்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளது.
இந்தியாவில் இதுவரை கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய இரண்டு கொரோனா தடுப்பு ஊசிகள் போடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இப்போது கொரோனா இரண்டாவது அலை காரணமாக தடுப்பூசி போடும் பணிகள் மேலும் துரிதப்படுத்தப்பட்டு வரும் நிலையில் இதுவரை இந்தியாவில் 12.38 கோடி வேக்ஸின் டோஸ் போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம் தான் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியின் 3 ஆவது கட்ட சோதனையை இந்தியாவில் மேற்கொள்ள மத்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளது. வெளிநாடுகளில் பயன்படுத்தப்பட்டு வரும் ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவன தயாரிப்பு தடுப்பூசிகளை இந்தியாவிலும் பயன்படுத்த ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம் அனுமதி கோரி வருகிறது.
இதனிடையே தற்போது இந்தியாவில் தடுப்பூசிகளுக்கான தேவை கடுமையாக அதிகரித்துள்ள நிலையில் ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவன தயாரிப்பு தடுப்பூசிகளுக்கு விரைவில் ஒப்புதல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.