Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எலக்ட்ரிக் வாகன துறையில் நுழையும் ஜியோ.. வெளியாகிறது ஜியோ சைக்கிள்..!

Advertiesment
எலக்ட்ரிக் வாகன துறையில் நுழையும் ஜியோ.. வெளியாகிறது ஜியோ சைக்கிள்..!

Mahendran

, புதன், 19 பிப்ரவரி 2025 (15:05 IST)
தொலைதொடர்பு துறை உள்பட பல துறைகளில் ஜியோ நிறுவனம் ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது எலக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தி துறையில் ஈடுபட போவதாகவும், முதல் கட்டமாக எலக்ட்ரிக் சைக்கிள் உற்பத்தி செய்து விற்பனை செய்ய போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
எரிபொருள் விலை உயர்வு, காற்று மாசு உள்பட பல்வேறு பிரச்சனைகள் சுற்றுச்சூழல் துறையில் உள்ள நிலையில், மக்களுக்கு ஒரு சிறந்த போக்குவரத்து சாதனம் வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஜியோ எலக்ட்ரிக் சைக்கிள் உற்பத்தி செய்யப் போவதாக அந்நிறுவனத்தின் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
 
48 வாட்ஸ் லித்தியம் பேட்டரியுடன் வரும் இந்த சைக்கிள், ஒருமுறை சார்ஜ் செய்தால் 100 கிலோ மீட்டர் வரை இயக்கலாம் என்றும், ஒரு மணி நேரத்திற்கு 45 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லலாம் என்றும் தெரிவித்துள்ளது. இது, குறிப்பாக இளைஞர்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
 
முழுமையாக சார்ஜ் செய்ய மூன்று மணி நேரம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் அடிப்படை விலை 15 ஆயிரம் ரூபாயாக இருக்கும் என்று கூறப்படும் நிலையில், ரூ.900 மட்டும் செலுத்தி முன்பதிவு செய்யலாம். மேலும், ஆன்லைன் மூலமாக இந்த சைக்கிளை ஆர்டர் செய்யலாம் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
2025 ஆம் ஆண்டு மே அல்லது ஜூன் மாதத்தில் இந்த சைக்கிள் அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும், முதல் கட்டமாக முக்கிய நகரங்களில் விற்பனைக்கு வர இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் விலகல்.. 15 ஆண்டுகள் கட்சியில் இருந்தவர்..!