ஜியோவை போன்று தற்போது ஏர்டெல் நிறுவனம் கொரோனா வைரஸ் இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்க டூல் ஒன்றை உருவாக்கியுள்ளது.
நாளுக்கு நாள் கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு மக்கள் படையெடுத்து வருவதால் மருத்துவர்கள் பல்வேறு மக்களையும் கவனிக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அறிகுறிகளை வைத்து கொரோனா இருக்கிறதா என்பதை கண்டறிய ஜியோ ஆப் உதவுகிறது.
ஜியோவை போன்று தற்போது ஏர்டெல் நிறுவனம் அப்பல்லோ மருத்துவமனையுடன் இணைந்து ஏர்டெல் டூல் ஒன்றை உருவாகியுள்ளது. அப்பல்லோ 247 என அழைக்கப்படும் இந்த டூல் உலக சுகாதார மையம் மற்றும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல மையத்தின் வழிகாட்டுதல்களை பூர்த்தி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.