லண்டனில் இருந்து மும்பைக்கு பறந்த விமானத்தை இயங்கிய பைலட்டுகள் நடுவானில் அடித்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த திங்கட்கிழமை ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் லண்டனில் இருந்து 324 பயணிகளுடன் மும்பைக்கு வந்தது. விமானத்தை மூத்த விமானி ஒருவர் இயக்கியுள்ளார். அவருடன் இணை விமானியாக பெண் விமானி ஒருவரும் இருந்துள்ளார்.
விமானம் நடுவானில் பறந்துக்கொண்டிருந்த இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. வாய் தகராறு முற்றுப்போய் அடிதடியில் முடிந்துள்ளது. மூத்த விமானி பெண் விமானியை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து பெண் விமானி அறையை விட்டு வெளியே வந்துள்ளார். பின்னர் பயணிகளின் நலன் கருதி மீண்டும் அவரது அறைக்கே சென்றுள்ளார். விமானம் மும்பை வந்து தரையிறங்கியவுடன் பெண் விமானி ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திடம் புகார் அளித்தார்.
இதைத்தொடர்ந்து புகார் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முடியும் வரை சம்பந்தப்பட்ட விமானிகள் பணியில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் விமான போக்குவரத்து இயக்குநரகம் அவர்களது உரிமத்தை ரத்து செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.