Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தியா கூட்டணி கூட்டத்தில் சமோசா தரவில்லை.. ஜேடிஎஸ் எம்பி அதிருப்தி..!

Advertiesment
இந்தியா கூட்டணி கூட்டத்தில்  சமோசா தரவில்லை.. ஜேடிஎஸ் எம்பி அதிருப்தி..!
, வியாழன், 21 டிசம்பர் 2023 (07:33 IST)
சமீபத்தில் டெல்லியில் இந்தியா கூட்டணியின் கூட்டம் நடைபெற்ற போது தனக்கு சமோசா தரவில்லை என ஜேடிஎஸ் கட்சியைச் சேர்ந்த எம்பி குற்றம் சாட்டி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
2024 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த இந்தியாவில் உள்ள முக்கிய எதிர் கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணி என்ற ஒரு கூட்டணி அமைத்துள்ளது. 
 
இந்த கூட்டணியில் நான்காவது கூட்டம் சமீபத்தில் டெல்லியில் நடந்த நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் நிதிஷ்குமார் ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த எம் பி சுனில்குமார் பிந்து என்பவர் இந்த கூட்டத்தில் தனக்கு சமோசா தரவில்லை என குற்றம் சாட்டி உள்ளார். 
 
தனக்கு டீ மற்றும் பிஸ்கட்டுகள் மட்டுமே கொடுக்கப்பட்டதாகவும்  மற்றவர்களுக்கு கொடுத்தது போல் சமோசா தனக்கு தரவில்லை என்றும்  கூட்டத்தில் பேசிய போது தெரிவித்தார். 
 
இந்தியா கூட்டணியின் கூட்டத்தில் பேசுவதற்கு பல விஷயங்கள் இருக்கும் நிலையில் சமோசா தரவில்லை என்று ஒரு கட்சியின் தலைவர் கூறியிருப்பது கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாகி உள்ளது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமைச்சர் பொன்முடியின் தண்டனை விவரங்கள்.. இன்று காலை நீதிமன்றம் அறிவிப்பு..!