ஜாவா பைக்குகள் மீண்டும் சந்தைக்கு வர ஆரம்பித்துள்ளன. நவம்பர் 15 (நேற்று) முதல் இந்த பைக்குகளுக்கான இணைய முன் பதிவு தொடங்கியுள்ளது.
புகழ்பெற்ற ஜாவா பைக்குகள் நீண்ட இடைவெளிக்குப் பின் தற்போது மீண்டும் மார்க்கெட்டுக்கு அறிமுகமாகியுள்ளன. சமீபத்தில் ஜாவா பைக்குகளின் 2 மாடல்கள் அறிமுக விழா நடைபெற்றது. அதில் பங்கேற்ற ரஸ்மோட்டோஜி குரூப்ஸின் சேர்மேன் போமன் இரானி மாடல்களை அறிமுகப்படுத்தி பேசினார்.
அதில் ‘ஜாவாவின் காலத்தால் அழியாத ஸ்டைலும் தனித்துவமும் இந்த புதிய ஜாவாவில் மறுபிறப்பு அடைகின்றன. கடந்த காலத்தின் நம்பகத்தன்மை மற்றும் பழக்கவழக்கத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் ஒரு பரிணாம அழகியலுடன் - கிளாசிக், நேர்த்தியான, அதிநவீன, கம்பீரமான - இது ஒரு மரபுரிமை தேடுபவர்களுக்கானது. புதிய வடிவம் மற்றும் செயல்பாட்டில் உள்ள ஜாவா பழைய உலக கதாபாத்திரத்துடனும், நவீனகால செயல்திறனுடனும் மிகச் சிறந்தது.’
’ஜாவா மோட்டார்சைக்கிள்கள் மீண்டும் வருகின்றன என்று என் குடும்பத்தினருக்கு பெருமையான விஷயம். இந்த பிராண்ட் முதன்முதலில் என் தந்தையால்அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரு சகாப்தத்தை வரையறுக்க ஒரு மோட்டார் சைக்கிள் வழிபாட்டு முறை மட்டுமல்லாமல், ஒரு தேசமாக பிரபலமாகிய பிரபலமான பண்பாடு மற்றும் சினிமா ஆகியவற்றையும் வரையறுத்தது. கடந்த காலத்தில் கிடைத்ததைப் போலவே ஜாவாவ தற்போது அதிகமான அன்பைப் பெறும் என்பதில் எங்களுக்கு சந்தேகம் இல்லை.’ என தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.
தற்போது ஜாவா மற்றும் ஜாவா 42 ஆகிய மாடல்கள் சந்தையில் கிடைக்கின்றன. அவற்றின் விலை முறையே 16400 ரூபாய் மற்றும் 15500 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றிற்கான இணையதள முன்பதிவு நவம்பர் 15-ந்தேதி முதல் தொடங்கியுள்ளது.