Publish Date: Thu, 17 Mar 2022 (18:23 IST)
Updated Date: Thu, 17 Mar 2022 (18:26 IST)
இந்தியா வருகிறார் ஜப்பான் பிரதமர்: மோடியின் அழைப்பு ஏற்பு!
இந்திய பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று ஜப்பான் பிரதமர் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியா மற்றும் ஜப்பான் இடையிலான உச்சி மாநாடு நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு ஜப்பான் பிரதமருக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தது
இந்த அழைப்பை ஏற்று 3 நாள் பயணமாக ஜப்பான் பிரதமர் இந்தியா வர உள்ளார் இந்த உச்சி மாநாட்டில் ஜப்பான் பிரதமர் மற்றும் இந்திய பிரதமர் பங்கேற்கும் நிலையில் இந்த மாநாட்டில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது