Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மும்மொழி கல்விக்கொள்கை குறித்து இரு தமிழக மத்திய அமைச்சர்களின் கருத்து!

மும்மொழி கல்விக்கொள்கை குறித்து இரு தமிழக மத்திய அமைச்சர்களின் கருத்து!
, ஞாயிறு, 2 ஜூன் 2019 (19:16 IST)
தாய்மொழி, ஆங்கிலம் தவிர இந்தி பேசாத மாநிலங்களில் மூன்றாவது மொழியாக இந்தி படிக்க புதிய கல்விக்கொள்கை பரிந்துரை செய்துள்ள நிலையில் இந்த பரிந்துரைக்கு தமிழக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. 
 
இந்த நிலையில் தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்படாவிட்டாலும் இரண்டு தமிழர்கள் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்த நிலையில் இவர்கள் இருவரும் தங்களுடைய டுவிட்டரில் மும்மொழி கல்விக்கொள்கை குறித்து தமிழக மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் தமிழில் டுவீட் செய்துள்ளனர்.
 
மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தனது டுவிட்டில், 'மத்திய அரசு மக்களின் கருத்துகளை கேட்டறிந்த பிறகே கல்வி குழுவின் வரைவை முன் எடுத்து செல்லும். அரசு அனைத்து இந்திய மொழிகளையும் வளர்க்கவும் ஊக்குவிக்கவும் எல்லா முயற்சியையும் எடுக்கும். எந்த மொழியையும் யார் மீதும் திணிக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை' என்று தெரிவித்துள்ளார்.
 
webdunia
அதேபோல் அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், 'மக்கள் கருத்துக்களை கேட்டறிந்த பின்பே கல்வி குழுவின் வரைவு அறிக்கை அமல்படுத்தப்படும். பிரதமர் அனைத்து இந்திய மொழிகளையும் வளர்க்க விரும்பியே “ஒரே பாரதம் உன்னத பாரதம்” என்ற முயற்சியை துவக்கினார். தொன்மையான தமிழை போற்றி வளர்பதற்கு மத்திய அரசு முன்னின்று ஆதரிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமைச்சர்கள் விடுமுறை எடுக்க வேண்டாம் - பிரதமர் மோடி அறிவுரை