Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திருப்பதி தேவஸ்தான தலைவராக ஒரு கிறிஸ்துவரா? ஜெகன்மோகன் ரெட்டி மீது முதல் குற்றச்சாட்டு

திருப்பதி தேவஸ்தான தலைவராக ஒரு கிறிஸ்துவரா? ஜெகன்மோகன் ரெட்டி மீது முதல் குற்றச்சாட்டு
, வியாழன், 13 ஜூன் 2019 (06:51 IST)
இந்துக்களின் புனித ஆலயங்களில் ஒன்றான திருப்பதி திருமலை தேவஸ்தானத்திற்கு ஒரு கிறிஸ்துவரை அதிலும் தனது தாய்மாமா சுப்பாரெட்டியை ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நியமிக்க திட்டமிட்டுள்ளதாக வெளிவந்த தகவல் இந்து அமைப்புகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் தந்தை ராஜசேகரரெட்டி ஆட்சி காலத்தில் கிறிஸ்துவர்களுக்கு பல சலுகைகள் கிடைத்ததாகவும், மதமாற்ற வேலைகள் ஜரூராக நடந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்ட நிலையி தற்போது ஜெகன்மோகன் மீதும் அதே குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வாடிகன் தேவாலயத்திற்கு ஒரு இந்துவை தலைவராக்க முடியுமா? அதுபோல் இந்து ஆலயத்திற்கு எப்படி ஒரு கிறிஸ்துவர் தலைவராக முடியும் என்று டுவிட்டர் பயனாளிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த சர்ச்சை ஜெகன்மோகன் ரெட்டி மீது படிந்த முதல் கறையாக பார்க்கப்படுகிறது.
 
திருப்பதி கோவிலை ஆந்திர அரசே ஏற்று நடத்த வேண்டும், தேவஸ்தானத்தை கலைக்க வேண்டும் என்று ஆந்திர பொதுமக்களும் பக்தர்களும் கூறி வரும் நிலையில் ஜெகன்மோகன் ரெட்டி ஒரு கிறிஸ்துவரை, அதிலும் தனது உறவினரை தலைவராக்க திட்டமிட்டிருப்பது இந்து அமைப்புகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

webdunia
இந்த நிலையில் திருமலை தேவஸ்தான உறுப்பினராக இருந்த, இன்போசிஸ் தலைவர் நாராயணமூர்த்தியின் மனைவி சுதா, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா குறித்து கருத்து தெரிவித்த சுதா, ''நான் பதவி விலகியதில் அரசியல் எதுவும் இல்லை என்றும்  முந்தைய அரசால் நியமிக்கப்பட்ட நான், புதிய அரசின் விருப்பம் இன்றி இந்த பதவியில் தொடர விரும்பவில்லை என்றும் ஒருவேளை புதிய அரசு விரும்பினால் நான் மீண்டும் பதவி ஏற்க தயார்'' என்றும் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தொழில் போட்டி காரணமாக வாலிபருக்கு கத்திக்குத்து