ஐ.டி. ஊழியர்கள் வீட்டில் இருந்தவாறே பணியாற்றும் நடைமுறை நீட்டிப்பு

Webdunia
செவ்வாய், 28 ஏப்ரல் 2020 (20:49 IST)
இந்தியாவில் கொரொனாவால் பாதிப்பட்டோரின் எண்ணிக்கை 30,000 நெருங்கி வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,543 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 29,435 ஆக உயர்ந்ததுள்ளதாக  மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்கள் விகிதம் 23.3% ஆக அதிகரித்துள்ளது எனவும்,  இதுவரை 6,868 பேர் குணமடைந்துள்ளதாக  மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஐடி ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றும் நடைமுறையை வரும் ஜூலை மாதம் 31 ஆம் தேதிவரை நீட்டிக்கப்படும் என மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.

கொரொனா ஊரடங்கு உத்தரவு மே மாதம் 3 ஆம் நாள்வரை அமலில் உள்ள நிலையில், ஏற்கனவே நாட்டில் உள்ள ஐடி ஊழியர்கள் அனைவரும் வீட்டில் இருந்தே பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, இம்மாதம் 30 ஆம் தேதிவரை நடைமுறையில் இருந்த வீட்டில் இருந்தே வேலை செய்யும் முறை வரும் ஜுலை ஜூலை மாதம் 31 ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட இருப்பதாக தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெற்கு வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு: 48 மணி நேரத்தில் தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி

28 புதிய ரயில்களை வாங்க சென்னை மெட்ரோ நிர்வாகம் டெண்டர்..! எத்தனை கோடி மதிப்பு?

நள்ளிரவில் வீடு வீடாக சென்று உதவி செய்யுங்கள் என்ற கூச்சலிட்ட பெண்.. பொதுமக்கள் அச்சம்..!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கும் தேதி.. 10 மசோதாக்கள் நிறைவேற்ற திட்டம்..!

இன்று முதல் மக்கள் சந்திப்பு பயணத்தை மீண்டும் தொடங்கும் விஜய்! காஞ்சிபுரத்தில் முதல் நாள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments