தமிழகத்தில் இன்று 121 கொரோனா பாசிட்டிவ்: சுகாதாரத்துறை தகவல்

Webdunia
செவ்வாய், 28 ஏப்ரல் 2020 (18:41 IST)
தமிழகத்தில் புதிதாக கொரோனா பாசிட்டிவ் ஏற்பட்டவர்கள் குறித்த தகவலை தினமும் சுகாதாரத்துறை தெரிவித்து வரும் நிலையில் இன்று 121 பேருக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாக சுகாதாரத்துறை சற்றுமுன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 2058ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் இன்று கொரோனாவால் பாதிப்பு அடைந்த 121 பேர்களில் சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 103 பேர்கள் என்றும் இதனையடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 673 ஆகவும் உயர்ந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
 
மேலும் தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவில் இருந்து குணமானவர்களின் எண்ணிக்கை 27 என்றும், இதனையடுத்து தமிழகத்தில் 1128 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று மட்டும் 7093 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும் இதனையடுத்து தமிழகத்தில் மொத்தம் 101,874 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நள்ளிரவில் நடந்த போதை விருந்து.. சுற்றி வளைத்த போலீசார்.. 35 இளம்பெண்கள் உள்பட 115 பேர் கைது..!

வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தம்.. தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கை

கரூர் சம்பவம் குறித்து அஜித் கருத்து.. துணை முதல்வர் உதயநிதியின் ரியாக்சன்..!

வங்கக்கடலில் உருவானது மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு.. தமிழகத்தில் கனமழை பெய்யுமா?

டிஜிட்டல் அரெஸ்ட்.. ரூ.17 லட்சம் ஏமாந்தாலும் உடனே சுதாரித்த மூதாட்டி.. துரித நடவடிக்கையால் பணம் மீட்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments