விக்ரம் லேண்டரை செயல்படுத்த வைக்க இஸ்ரோவின் அடுத்த அதிரடி திட்டம்;

Webdunia
திங்கள், 9 செப்டம்பர் 2019 (09:03 IST)
இஸ்ரோ விஞ்ஞானிகள் அனுப்பிய சந்திராயன் 2 விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் சந்திரனில் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் திடீரென தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால், விக்ரம் லேண்டர் என்ன ஆனது? என்று தெரியாமல் விஞ்ஞானிகள் குழப்பத்தில் இருந்தனர்.
 
 
இந்த நிலையில் நிலவை சுற்றி வரும் ஆர்பிட்டர் அனுப்பிய தெர்மல் இமேஜில் இருந்து நேற்று விக்ரம் லேண்டர் இருக்குமிடம் கண்டுபிடிக்கப்பட்டது. இருப்பினும் விக்ரம்லேண்டர் செயல்படும் வகையில் இல்லாததால் அதனை செயல்படுத்த வைக்க இரவுபகலாக இஸ்ரோ விஞ்ஞானிகள் முயற்சித்து வருகின்றனர்.
 
 
இந்த நிலையில் விக்ரம் லேண்டரை துல்லியமாக படம்பிடித்து அதில் ஏற்பட்ட குறையை அறிய, ஆர்பிட்டரை நிலவின் அருகில் கொண்டு செல்ல இஸ்ரோ முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது அதாவது நிலவை சுற்றி வந்து கொண்டிருக்கும்  ஆர்பிட்டரை நிலவின் 100 கி.மீ சுற்றுவட்டப் பாதையில் இருந்து 50 கி.மீ. தூரமாக குறைக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.


இதன் மூலம் விக்ரம் லேண்டரை துல்லியமாக படம் பிடித்து அதன் எந்த பாகத்தில் குறை இருக்கின்றது என்பதை அறிந்து அதனை சரிசெய்வதே விஞ்ஞானிகளின் திட்டமாக உள்ளது. இந்த நடவடிக்கை வெற்றி அடைந்துவிட்டால் விக்ரம் லேண்டரை செயல்படுத்தி வைப்பதோடு அதன் உள்ள ரோவரையும் வெளியே கொண்டு வர முடியும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாதமாக மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்: ஈபிஎஸ் கண்டனம்..!

விஜய் கிரிக்கெட் பால் மாதிரி!.. அவருக்குதான் என் ஓட்டு!.. பப்லு பிரித்திவிராஜ் ராக்ஸ்!...

20 வருடங்களாக வைத்திருந்த உள்துறையை பாஜகவுக்கு தாரை வார்த்த நிதிஷ்குமார்.. என்ன காரணம்?

7ஆம் வகுப்பு மாணவி பள்ளி மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு: ஆசிரியர்கள் மீது பெற்றோர் குற்றச்சாட்டு

கோவை மெட்ரோ.. திருப்பி அனுப்பிய மத்திய அரசின் அறிக்கையில் 3 முக்கிய விளக்கம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments