நாளை பிஎஸ்எல்வி சி 60 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட உள்ள நிலையில் ராக்கெட்டை ஏவுவதற்கான 25 மணி நேரம் கவுண்ட் டவுன் இன்று தொடங்க இருப்பதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
ஸ்பேடெக்ஸ் திட்டத்திற்காக விண்ணில் செலுத்தப்பட இருக்கின்ற இந்த பிஎஸ்எல்வி 60 ராக்கெட்டின் நான்காம் நிலை 24 ஆய்வுக் கருவிகளுடன் கூடியதாக ஏற்கனவே இஸ்ரோ தெரிவித்திருந்ததை நாம் பார்த்தோம். இதில் 14 ஆய்வு கருவிகள் இஸ்ரோ சார்பில் தயாரிக்கப்பட்டது என்பதும், 10 ஆய்வு கருவிகள் கல்வி நிறுவனங்கள் மற்றும் புத்தாக்க நிறுவனங்கள் தயாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ரோபோடிக், செயற்கை நுண்ணறிவு, உயிரி தொழில்நுட்பம் உட்பட பல ஆய்வுகளை இந்த கருவிகள் விண்வெளியில் முன்னெடுக்க உள்ளதாகவும், இஸ்ரோ விளக்கம் அளித்துள்ளது.
நாளை பிஎஸ்எல்வி சி 60 ராக்கெட் வெற்றிகரமாக செலுத்தப்படும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.