Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருவனந்தபுரம் தொகுதியில் இஸ்ரோ தலைவர் சோமநாத் போட்டியா? பாஜகவின் பலே திட்டம்..!

Mahendran
வெள்ளி, 26 ஜனவரி 2024 (12:44 IST)
வரும் பாராளுமன்ற தேர்தலில்  திருவனந்தபுரம் தொகுதியில் இஸ்ரோ தலைவர் சோமநாத்தை நிறுத்த பா.ஜனதா பலே திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
 பாராளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் பாரதிய ஜனதா, காங்கிரஸ் உள்பட அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன
 
 இந்த நிலையில்  கேரள மாநிலத்தில் ஆளுங்கட்சியான கம்யூனிஸ்ட் மற்றும் எதிர்க்கட்சியான  காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் வலிமையாக இருக்கும் நிலையில் பாரதிய ஜனதா இந்த மாநிலத்தில் மிகவும் குறைவான  வாக்கு சதவீதத்தை கொண்டுள்ளது. 
 
இதனால் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியுடன் மோதுவதற்கு வலிமையான வேட்பாளர்களை பாஜக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில்  திருவனந்தபுரம் தொகுதியில் இஸ்ரோ தலைவர் சோம்நாத்  பாஜக வேட்பாளராக போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது. 
 
இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சசிதரூர் அவர்களுக்கு இவர் தான் சரியான போட்டியாளர் என்று பாஜக கருதுவதாக தெரிகிறது. நான்காவது முறையாக சசிதரூர் இதய தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ள நிலையில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் அவருடன் மோதுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று முதல் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு.. 4858 பறக்கும் படைகள் தயார்..!

பேருந்தில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவி.. ஓட்டுனர் அலட்சியம் காரணமா?

இன்று சிஎஸ்கே - ஆர்சிபி போட்டி.. சென்னை சேப்பாக்கத்தில் போக்குவரத்து மாற்றம்..!

இந்த ஆண்டு முதல் மூன்று CA தேர்வுகள்: தேர்ச்சி விகிதம் அதிகமாக வாய்ப்பு..!

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments